Your blog post

Blog post description.

10/10/20251 min read

பிரபஞ்சம் தோன்றியது பெரு வெடிப்பிலிருந்து என்று நம்பப்படுகிறது. பிரபஞ்சத்தில் கோள்கள், விண்மீன்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் ஒன்றன் மீது ஒன்று ஈர்ப்பு விசையை கொண்டு இருக்கும். உதாரணமாக நிலவுக்கும் பூமிக்குமான ஈர்ப்பு, சூரியனுக்கும் அதை சுற்றி உள்ள மற்ற கோள்களுக்குமான ஈர்ப்பு, ஒரு சூரிய குடுபத்திற்கும் மற்ற சூரிய குடும்பத்திற்குமான ஈர்ப்பு என அனைத்துமே அந்தந்த பொருளின் அளவு மற்றும் நிறையை பொறுத்து மாறுபடுகிறது. அதிகப்படியான அளவு மற்றும் நிறை கொண்ட பொருள் மற்றொரு பொருளை தன் பக்கமாக ஈர்க்கும் இது அறிவியல் விதி. இவைகள் இந்த பிரபஞ்சத்தில் நிகழ்பவைகள்.

இதுபோலவே நாம் வாழும் இந்த பூமியும், மனித உடல் எவ்வாறு புரிந்து கொள்ள முடியாத அதிசயங்களை கொண்டதோ அதே போல் தான் இந்த பூமியும்.

இந்த பூமியில் உயிரினங்கள் தோன்ற அடிப்படை காரணம் இங்கு இருக்கும் நீர் மட்டுமே. இந்த நீர் பூமிக்கு எரிமலை வெடிப்பு மூலமாகவும், விண்கற்கள் பூமியில் மோதும் போதும் அதில் இருந்த நீர் மூலக்கூறுகளினால் பூமியில் நீர் தோன்றியது என்று நிரூபணம் அகியுள்ளது, இவ்வாறு பூமிக்கு நீர் வந்த பிறகு அவை இந்த பூமியின் மேற் பரப்பிலும் வளிமண்டலத்திழும் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம், அதாவது நீர் தோன்றியது, அதை தொடர்ந்து உயிர் தோன்றியது, பிறகு வளிமண்டலம் தோன்றியது என பல்வேறு மாற்றங்கள் 4.6 பில்லியன் வருடம் முதல் இன்றுவரை நிகழ்ந்து கொண்டு இருக்கிறது,

பூமியின் தொடக்க காலத்தில் வளிமண்டலம் இல்லாமல் இருந்து, பிறகு எரிமலை வெடிப்புகளினால் கார்பன் dioxide வாயுக்கள் அதிகரித்தது, உயிர் தோன்றிய பிறகு கார்பன் அளவு குறைந்து ஆக்சிஜன் அளவு கூடியது இதனால் வளிமண்டலத்தில் மேக கூட்டங்கள் தோன்றி மழை பொழிய ஆரம்பித்து சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு மழை தொடர்ந்து பெய்தது, இவ்வாறு தொடர் மழையால் பூமியின் மேற்பரப்பில் இருந்த பள்ளங்களில் நீர் தொடர்ந்து தேங்க ஆரம்பித்து அவைகள் இன்று கடலாக காட்சி அழிகிறது இதுவும் ஒரு அதிசயமான அறிவியல் நிகழ்வுகளில் ஒன்று.

இவ்வாறு பெய்த தொடர் மழை பூமியின் உள்ளே இருக்கும் பாறை வெடிப்புகளில் சென்று சேர ஆரம்பித்தது அந்த பாறை வெடிப்பு நீர்களை தான் மனிதன் கிணறுகளை வெட்டி அந்த பாறை வெடிப்பில் இருக்கும் நீர்களை சேகரித்து வெயில் காலங்களில் ஏற்படும் நீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டான்.

பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தில் ஏற்பட்ட சிந்திக்கும் திறனால் அதீத மாற்றங்களை நிகழ்த்தி விட்டோம், அதில் ஒன்று நீர் ப்பற்றாகுறை, 40 களின் தொடக்கத்தில் குறைந்த ஆழத்தில் கிடைத்த நீர், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நீர் தேவை பற்றாக்குறையை ஏற்படுத்தியதால் 60 களில் நிலத்தடி நீர் கிடைக்கும் ஆழம் கீழே செல்ல ஆரம்பித்தது, 80 மற்றும் 90 களில் உலகமயமாதல் கொள்கை உற்பத்தியை பெருக்கியதால், நீர் தேவையும் அதிகரித்தது, எனவே அறிவியல் நுட்பங்களை பயன்படுத்தி நிலத்தடி நீர் கண்டுபிடிக்க தொடங்கினான் மனிதன்.

இன்றுவரை நிலத்தடி நீர் கண்டுபிடிக்க பலங்காலத்தில் இருந்து பின்பற்றப்படும் தேங்காய், இரும்பு, காந்தம் போற்றவைகளை வைத்தே நிலத்தடி நீர் இருக்கும் இடம் கணிக்கப்படுகிறது, இது சில நேரங்களில் நல்ல பலனாகவும் சில நேரங்களில் ஆயிரம் அடிகளை தொட்டும் நிலத்தடி நீர் கிடைப்பதில்லை.

காரணம் இந்த முறைகளை பின்பற்றி எவ்வாறு நிலத்தடி நீர் கணிக்கப்படுகிறது என்றால் நாம் மேலே சொன்ன இருவேறு பொருள்களில் ஏற்படும் ஈர்ப்பு விதி ஏறக்குறைய பொருந்தி போவதாக கொண்டாலும் அதில் இருக்கும் அறிவியல் நிரூபணம் இல்லாத ஒன்றாகத்தான் இன்றளவும் உள்ளது. மேலே சொன்ன விதிகளின்படி இதுவும் ஒரு அறிவியல் முறை போல் தான் தோன்றும், பிறகு இதில் எவ்வாறு நீர் கிடைக்காமல் போகும் என்ற கேள்விக்கு நமக்கு எழும். அதற்கான காரணம் ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றம், அந்த ஈர்ப்பு விசைக்கான காரணம் ஆகியவை தொழில் நுட்பத்தை கொண்டு மட்டுமே உணர முடியும். உதாரணமாக பூமிக்கடியில் இருக்கும் பாறையில் வெடிப்புகளில் நீர் இருந்தால் ஒரு விதமான ஈர்ப்பும், அது வெறும் வெட்டிப்பாக மட்டுமே இருந்தால் வேறு விதமான ஈர்ப்பும் இருக்கும். இதில் ஏற்படும் மாற்றங்களை அறிவியல் தொழில் நுட்பத்தினால் மட்டுமே கண்டுபுடிக்க முடியும்.

மற்றொரு உதாரணமாக பூமிக்கடியில் இரண்டு அல்லது மூன்று விதமான பாறைகள் இருக்கும் இடத்தில் நாம் ஆழ்குழாய் கிணறு அமைக்க போகிறோம் என்று வைத்துக்கொண்டால் அதே இடத்தில் மேலே சொன்ன முறைகளில் நிலத்தடி நீர் இருக்கும் இடத்தை தேர்வு செய்தோம் என்றால் அது தவறான இடமாகும், காரணம் இந்த மூன்று பாறைகளும் மேலே சொன்னஅறிவியல் விதிகளின் படி வெவ்வேறு அளவு, நிறை கொண்டதாகும் இதனால் அங்கு நம்மால் சில மாற்றங்களை உணர்ந்து தேர்வு செய்கிறோம் எனவே தவராகிறது.

ஒரு பாறையில் வெடிப்பே இல்லாமல் கரும் பாறை அதன் மேலோ அல்லது அருகிலோ இருக்கும் மற்றொரு பாறையும் ஈர்ப்பு விசைகளில் வேறுபடும். இந்த வெடிப்பு இல்லாத கரும் பாறை 1000 அடி ஆழம் கொண்டது என்றால் எவ்வாறு நீர் வரும். இந்த பாறை 1000 ஆடி ஆழம் வரை இருக்கிறது என்று தேங்காய், காந்தம் மற்றும் இரும்பு போன்றவைகளை வைத்து நீரோட்டம் கண்டு புடிக்கும் போது பிழை ஏற்பட வாய்ப்பு அதிகம், எனவே தான் அறிவியல் தொழில்நுட்பம் இங்கு அவசியம் ஆகிறது.

இந்த அறிவியல் தொழில்நுட்பம் என்பது மிகவும் எளிதாக புரிந்து கொள்ள கூடிய ஒன்றுதான். இதே போன்ற தொழிநுட்பத்தை பயன்படுத்தி தான் பூமியின் அதீத ஆழத்தில் இருக்கும் பெட்ரோல், இயற்கை எரிவாயு போன்ற எண்ணெய்கள் பாறை இடுக்குகளில் இருப்பதை கண்டு பிடிக்கப்படுகிறது, இதுபோல் பூமிக்குள் இருக்கும் இயற்க்கை வளங்களை எடுக்க பயன்படும் தொழில் நுட்பங்களில் ஒன்று தான் நிலத்தடி நீர் எடுப்பதற்கும் பயன்படுத்த படுகிறது அதுவே Electrical Resistivity Survey என்று அழைக்கப்படுகிறது,

இதில் குறிப்பிட்ட அளவு கரண்டை பூமிக்குள் அனுப்பி அந்த கரண்டில் ஏற்படும் தடையை பொறுத்து பூமிக்குள் இருக்கும் பாறை, கனிமம் மற்றும் நீர் போன்றவைகளை தெரிந்து கொள்ள முடியும், நீருக்கு என்று நிரூபிக்க பட்ட அதாவது Standard values, கனிமத்துக்கு, பாறைகளுக்கு என்று அறிவியல் நிரூபணம் ஏற்கனவே உள்ளது, இது எவ்வாறு என்றால் மனித உடலில் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு போன்றே பூமியின் அனைத்தும் மனிதனால் இயன்றவரை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது

நாம் நினைக்கலாம் பூமிக்குள் எவ்வாறு கரண்டு செல்லும் என்று, ஆனால் அதே பூமியில் இருந்து தான் (Transformer) மின்மாற்றிக்கு Earth செல்கிறது, இந்த earthing இல்லை என்றால் மின்மாற்றியில் மின்னழுத்தம் வேறுபடும், இதேபோல் தான் பூமிக்குள் இருக்கும் பாறை, நீரோடைகள், கனிமங்கள் போன்ற அனைத்துக்கும் Gravity, Electrical Resistivity, Seismicity, Magnetic Susceptibility இருக்கும், இதை சரியான முறையில் புரிந்து கொள்வது அவசியம்.

இதை ஒரு மருத்துவர் எவ்வாறு தனது அனுபவத்தில் Scanning Report பார்த்து மருத்துவம் செய்கிறாரோ அதே போல் தான் இங்கும். பூமியை பொறுத்தவரை Geologist பூமியின் வயது, தோற்றம், அமைப்பு, உருவம், கனிமம் போன்ற அனைத்தையும் ஒரு மருத்துவர் போல் கற்று வைத்திருப்பார்கள், ஒரு மருத்துவரின் அனுபவமும், Geologist அனுபவமும் ஒன்று தான், அதுதான் அவர்களை திறம்பட செயல்பட வைக்கிறது, எனவே நிலத்தடி நீர் கண்டுபுடிக்கும் முறையில் Geologists அவசியம் தேவை, அவர்களின் முன் அனுபவமே இதில் நிறைந்த பலனை பெற்றுக்கொடுக்கும், அந்த வகையில் Azhangaran Geo Consultancy 15 வருடம் அனுபவம் உள்ள Geologist இந்த நிறுவனத்தில் உள்ளார்கள், இந்த நிறுவனம் விவசாயிகள், பண்ணை வைத்து இருப்பவர்கள், போன்ற அனைவரும் ஒரு ஆழ்துளை கிணறுகள் அமைக்க சரியான இடத்தை தேர்வு செய்து அதன் சரியான ஆழம், எத்தனை நீரோடைகள் உள்ளது அந்த நீரோடையில் தண்ணீர் உள்ளதா என்ற அனைத்தையும் விவசாயிகளிடம் தெரியப்படுத்தி ஆழ்துளை கிணறு அமைக்கவேண்டிய இடத்தை உறுதி படுத்துவோம். இந்த முறையை பயன்படுத்தி நிலத்தடி நீர் கண்டுபிடிப்பதால் வீண் செலவு குறையும்